T2WEHW2MONMHBBBKV2777SU7DU scaled
உலகம்செய்திகள்

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம்

Share

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம்

காசா மீண்டும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த முழு சக்தியையும் பயன்படுத்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சண்டையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற 4வது நாளாக முயற்சித்து வருகிறது.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடி போர்நிறுத்த வாய்ப்பை நிராகரிக்கிறார். தற்போது இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ளார் வீடியோவில் ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த வீடியோவில் அவர், ‘நாங்கள் வெற்றி பெறும் வரை போராடுவோம். ஹமாஸ் ஒழிப்பு மற்றும் எங்களின் பணயக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது ஆகிய அனைத்து அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போரை நிறுத்த மாட்டோம்.

ஹமாஸிடம் நான் முன் வைக்கும் தேர்வு (Choice) மிகவும் எளிமையானது: சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை.

நாங்கள் ஹமாஸை ஒழித்த பிறகு, காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த எனது முழு சக்தியையும் பயன்படுத்துவேன்’ என சபதமிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f67e9938fc6
செய்திகள்இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் மாபெரும் சுற்றிவளைப்பு: 4,631 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...

1732012733 1732005467 ruhunu university 600 1
செய்திகள்இலங்கை

மாணவர்கள் மோதல்: ருஹுணு விவசாய பீட மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற உத்தரவு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை மறு அறிவித்தல் வரும்...

21 4
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் முற்பகை காரணமாக இளைஞன் வெட்டிப் படுகொலை! – நீதவான் உத்தரவு

கிளிநொச்சி, அக்கராயன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில், இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை...