விமானத்தில் திடீர் தீ! – 14 பயணிகள் படுகாயம்

thumbnail 2

மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், விமானத்தில் இருந்த 14 பயணிகள் காயமடைந்தனர்.

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக அவசர கால வெளியேறும் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மஸ்கட் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் 2-ல் புகை வெளியேறுவதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#worldnews

Exit mobile version