உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இன்று வெளியான உலக சந்தையின் புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றினால் உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment