குப்பைத் தொட்டியில் 4 மாத பெண் குழந்தை: தெரு நாய் தூக்கிக் கொண்டு சுற்றிய அவலம்
லெபனானில் கருப்பு பை சுற்றப்பட்டு குப்பை தொட்டியில் கிடந்த நான்கு மாத பெண் குழந்தையை தெரு நாய் ஒன்று தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை லெபனானின் வடக்கு பகுதி நகரமான திரிபோலி-யில்(Tripoli) தெரு நாய் ஒன்று குழந்தை ஒன்றை குப்பை பையுடன் தூக்கி கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து நான்கு மாதங்களே இருக்கும் என நம்பப்படும் பெண் குழந்தையை நடைபாதை கடப்பவர் ஒருவர் அழும் குரல் கேட்டு மீட்டுள்ளார், பின் மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார்.
தி நேஷனல் அறிக்கைப்படி, கருப்பு நிறப் குப்பை பையில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ஒன்றை நாய் ஒன்று மாநகராட்சி கட்டிடத்தின் முன் புதன்கிழமை காலை தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட குழந்தை முதலில் இஸ்லாமிய மருத்துவமனையில் பெயர் தெரியாத நபரால் அனுமதிக்கப்பட்டுள்ளது, பின்னர் சிகிச்சைக்காக குழந்தை திரிபோலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் புகைப்படம் இணையதளம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இணையவாசிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் வல்லுநர்கள் தகவல்படி, நிதி நெருக்கடிகளை நாடு அதிகமாக எதிர்கொண்டு வருவதால், குழந்தைகள் பிறப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய புள்ளி விவரங்களைக் கண்காணிக்க மத்திய அமைப்பு நிறுவப்படவில்லை, இதனால் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான துஷ்பிரயோக வழக்குகள் அதிகரித்து வருகிறதா என்பதை கண்டறிய முடிவது இல்லை என தெரிவித்துள்ளனர்.
- 100 news
- bbc news
- biden news
- big news
- breaking news
- cbn news
- cbs news
- china news
- christian news
- dw news
- english news
- faith news
- fast news
- hindi news
- international news
- latest news
- live news
- my world
- News
- news headlines
- news live
- news nation news
- News today
- north korea news
- quick news
- the world ahead
- today news
- top news
- tvp world
- u.s. news
- us news
- wion news today
- World
- world 2023
- world ahead
- world news
- world news live
Leave a comment