24 665aafb66c947
இலங்கைஉலகம்செய்திகள்

MasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி

Share

MasterChef Australia போட்டியில் மீண்டும் களமிறங்கிய இலங்கை யுவதி

MasterChef Australia போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை (Sri Lnka) வீராங்கனை சாவிந்திரி பெரேராவுக்கு (Savindri Perera) நடுவர்களால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் 2024 ஆம் ஆண்டு போட்டித் தொடரில் இணைவதற்கான வாய்ப்பைப் பெற்ற எட்டு போட்டியாளர்களில் சாவிந்திரி பெரேராவும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடுவர்கள் அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நேசித்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதுடன் மற்றும் இலங்கை யுவதி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்ததாகவும் நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

MasterChef Australia நடுவர்கள் சாவிந்திரி முந்தைய போட்டிகளில் அவர் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனது 18 ஃஅவது வயதில் அடிலெய்டுக்கு வரும் வரை இலங்கையின் கிராமிய சமையல் முறையும் மற்றும் காட்சிப்படுத்தலும் பாராட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது வேலையை விட்டுவிட்டு MasterChef Australiaவின் வரவிருக்கும் சுற்றுகளுக்கு தயாராகி வருகிறார்.

இந்த சுற்றுக்கு அவர் இலங்கை மதிய உணவை வழங்கியதுடன் அதில் பன்றி இறைச்சி கறி, மிளகாய் இறால், உருளைக்கிழங்கு பால் குழம்பு, வெங்காய இலை சம்பல் மற்றும் கத்திரிக்காய் உள்ளிட்ட பல வகையான உணவுகளை வழங்கியிருந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், MasterChef போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை உணவின் அனுபவத்தைப் பெற்றதற்காக போட்டியின் நடுவர்களும் அவரை பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...