இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

rtjy 235

இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

இஸ்ரேலில் இலங்கையின் 32 பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் இந்த காட்சிப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.

 

இந்நிலையில் பிரதான உரையை ஆற்றிய தூதுவர் பண்டார, பண்டைய கண்டிய இராச்சியத்தில் இருந்து இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தின் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டி, பண்டைய இலங்கையின் மன்னர்களுக்கு இந்த 32 உணவுகள் எவ்வாறு பரிமாறப்பட்டன என்பதை விளக்கியுள்ளார்.

பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வர விரும்புவதால், இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகள், செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வின் அழைப்பாளர்களில் பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமையல் எழுத்தாளர்கள், யூடியூபர்கள், சமூக ஊடகங்களில் ஈடுபடுபவர்கள், குடிவரவு ஆணைய அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

Exit mobile version