rtjy 219 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் புகைப்படங்கள்

Share

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் புகைப்படங்கள்

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என மலேசிய பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோலாலம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்றிரவு (22) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளதுடன், இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதுடன், சம்பவத்தில் பலியான மூன்று பேரில் ஒருவர், 20 வயது திருமணமான தம்பதியின் மகன் என்றும் செந்தூல் பொலிஸ் தலைமையகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.மேலும்,சந்தேக நபர்களின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், கோலாலம்பூர் பொலிஸ் செயல்பாட்டு அறையை 03-21460584/0585 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது விசாரணைக்கு உதவ அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவுறத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...