ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவருக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குடும்பத்தினர் கனடாவில் குடியேற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எட்வர்ட் ஜோசப் ஸ்னோவ்டென் என்ற நபர் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து மிகவும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார்.
இந்நிலையில், அவர் ஹொங்ஹொங்கிற்கு தப்பிச் சென்ற போது அவர் யார் என்றே தெரியாமல் இலங்கை அகதிகளான சுப்புன் கெல்லபத்த மற்றும் அவரது மனைவி அடைக்களம் கொடுத்தனர்.
சுப்புன் குடும்பத்தினர் ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் அச்சத்தின் பேரில், தமது சட்டத்தரணிகள் மூலம் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது குறித்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் நேற்றைய தினம் கனடாவில் குடியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
Leave a comment