1 15 scaled
உலகம்செய்திகள்

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

Share

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

இவர், கடந்த 2000 -ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு பொலிசார் ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்ததையடுத்து, இந்த வழக்கு திருச்சி 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு, கைதான ஆனந்த் ஜாமினில் வெளிவந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்ததும் அவரை காணவில்லை.

அதாவது, 2004 பிப்ரவரி 6 -ம் திகதி முதல் ஆனந்த்தை காணவில்லை. இந்நிலையில், ஆனந்த் தொடர்பான வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், 19 ஆண்டுகள் தலைமறைவாகி இருக்கும் ஆனந்ததை மீண்டும் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...