1 scaled
உலகம்செய்திகள்

ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!

Share

ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!

ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.

இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அமைப்பு எடுத்து வருகிறது.

கடந்த செப்டம்பரில் 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண்ணான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்பவர் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக இந்த அமைப்பு அவரை கைது செய்தது. காவலில் இருந்தபோது காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஃபைட் வேர்ல்ட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க போட்டியில் (FIDE World Rapid and Blitz Chess Championship) ஈரான் நாட்டை சேர்ந்த 26 வயதான சரசதத் கதேமல்ஷரி (Sarasadat Khademalsharieh) பங்கேற்றார்.

அப்போது அவர், ஈரான் நாட்டின் பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமான ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார். இதனையடுத்து அந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஈரானில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் சரசதத் இதற்கு அஞ்சவில்லை. தன் நாட்டின் மத அடிப்படைவாத தலைமைக்கு கீழ்படியாமல் வாழ்வதையும் அவர் மாற்றி கொள்ள விரும்பவில்லை. 2023 ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு அவர் குடிபெயர்ந்தார்.

தற்போது அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் குடியுரிமை வழங்கியிருக்கிறது. சரசதத்தின் வழக்கில் சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று ஸ்பெயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...