4 33
உலகம்செய்திகள்

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

Share

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

சீனாவை(China) சேர்ந்த செற்கை நுண்ணறிவு(AI) செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டீப்சீக்(Deepseek) செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சீனா டீப்சீக் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது.

டீப்சீக்-இன் ஆர்1 செட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியுள்ளது.

எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில், பதில் அளித்த சீன AI நிறுவனமான டீப்சீக், “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது” என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது “தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்” என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.

பதிவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது.

எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ‘AI Chatbot’ இன்னும் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...