மகன் விற்பனைக்கு…! தந்தை எடுத்த விபரீத முடிவு

23 653d696b58518

மகன் விற்பனைக்கு…! தந்தை எடுத்த விபரீத முடிவு

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெற்ற மகனை விற்கும் நிலைக்கு தாய் மற்றும் தந்தை தள்ளப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களுடைய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் வேதனையான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

இவர்களுக்கு சுமார் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை கடன் இருக்கும் நிலையில், கடன் அளித்தவர்கள் இவர்களுக்கு விடாமல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் வழி தெரியாமல் திணறிய அலிகார்க் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது மகனை விற்கும் விபரீத முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாத உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தந்தை, காந்தி பூங்கா அருகே “என் மகன் விற்பனைக்கு” என்ற பதாகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version