சத்தமின்றி பரவும் ஒமைக்ரோனின் துணை வைரஸ்!

500x300 1724418 ba275 virus subvirus of omicron virus 1

ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2.75 வைரஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதாகும். இந்த புதிய வகை வைரஸ், இந்தியாவில் மராட்டியம், கர்நாடகம், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ், பிஏ.2. வைரசின் இரண்டாம் தலைமுறை வைரஸ் ஆகும். இது நமது நாட்டில் தொற்று பெருக்கத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் ஆபத்தானதா, இது வேகமாக பரவுகிற ஆபத்தைக் கொண்டுள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு பதில் அளிக்கிற வகையில் நம்பிக்கையூட்டும் தகவல்களை மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவை வருமாறு:-

* தற்போது உலகமெங்கும் ஒமைக்ரான் வகை வைரஸ்கள் உலகளவில் பரவி வருகின்றன. பிஏ.2. வைரஸ், பிஏ.1 வகை வைரசை மாற்றி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

* இந்தியாவில் பிஏ.2.75 வைரஸ், குறைந்த அளவில்தான் பரவலில் உள்ளது. இதுவரை அது நோய் தீவிரத்தை ஏற்படுத்த வில்லை. பரவலையும் அதிகரிக்கவில்லை.

* பிஏ.2 பரம்பரை வளர்ச்சி அடைந்து வருவதால், அதன் துணைப் பரம்பரைகள் இப்போது தனித்துவமான மாறுபாடுகளின் தொகுப்புடன் உருவாகி வருகின்றன. பிஏ.2.75 என்பது பிஏ.2-ன் ஒத்த துணை பரம்பரை ஆகும்.

* இந்த துணை பரம்பரை வைரஸ் பரவல்களையும், பிற ஒமைக்ரான் துணை பரம்பரை வைரஸ்களையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வர வேண்டியது முக்கியம் ஆகும். மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைகளை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#WorldNews

Exit mobile version