அசாமில் துப்பாக்கி சூடு! – 2 பேர் பலி

gun

இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே சதாம் உசைன், செய்க் பாரித் ஆகிய இருவரும் பலியாகியுள்ளார்கள்.

அரசுக்கு சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வந்த மக்களை வெளியேற்றும் திட்டத்தின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலைமை குறித்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, “ஆக்கிரமிப்பு அகற்றும்பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெறும்.

இருட்டிவிட்டால் மறுநாள் தொடரும். பொலிஸார் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கான காவலில் ஈடுபடுவார்கள்” என்று கூறி உள்ளார்.

Exit mobile version