புதுடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு!

delhi rohini court 1632476887

புதுடெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுடெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ரௌடி கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் உடையில் வந்திருந்தவர்கள் நடாத்திய இந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய குற்றவாளியான ஜிதேந்தர் கோகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version