ஆப்கான் தூதரகத்தில் துப்பாக்கி சூடு! – பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூதரக தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது உடனடியாக தெரிய வில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தூதர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரின் அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஹெக்மத்யாரை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

#world

Exit mobile version