ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் காணப்பட்டார்.
1971-ம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக ஆட்சி செய்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் ஷேக் கலீஃபா அரபு நாட்டின் இரண்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை மேற்கொண்டுவந்தார்.
“நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம், அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
#World
Leave a comment