பாகிஸ்தானின் புதிய பிரதமராக மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் (வயது 70) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பில் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஷெபாஷ் ஷெரீப் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ வெளியுறவு அமைச்சராக தேர்வு செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
#WorldNews