வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை தனது படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை மனைவி பார்த்தார். அதனை எடுத்து ஆய்வு செய்த போது பேனா கேமரா என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பேனா கேமராவை பார்த்த கணவர் அதில் தனது மனைவி உடை மாற்றும் வீடியோக்கள் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராஹிம், படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பெண்களுக்கு தெரியாமல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இப்ராஹிமை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கேமராவையும் பறிமுதல் செய்தனர்.