24 668aae2e0fddd 3
உலகம்செய்திகள்

பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

Share

பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியின் மையமானது மெதுவாக எதிர்ப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது

பூமியானது, ”Crust, mantle” எனப்படும் வெளிப்புற மையம் மற்றும் உட்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக அமைந்துள்ளது.

இதனால் பூமி அதன் சுழற்சிப் பாதையில் சுற்றும் வேளையில் அதன் மையத்தில் உள்ள திடமான உலோகம் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன உட்புற மையம் (Inner Core) என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தன்னிச்சையாக சுற்றி வருகின்றது.

நிலவின் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 12 ஆம் திகதி , பூமியின் இந்த மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி வரும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பூமியின் சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்ப்புறமாக சுழலத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...