கைபேசிகளை செயற்கைகோள் மூலம் இயக்கும் வசதி: சீனா புதிய சாதனை

24 661efe286e72b

கைபேசிகளை செயற்கைகோள் மூலம் இயக்கும் வசதி: சீனா புதிய சாதனை

தொலைபேசி டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக் கோள் மூலமாக ஸ்மார்ட் கைபேசிகளினூடாக தொடர்பு கொள்ளும் ஆய்வில் சீனா வெற்றிப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் கைபேசிகளினூடாக தொடர்பு கொள்ளும் வசதியை கண்டுபிடிப்பதற்கான ஆய்வை சீனா மேற்கொண்டது.

இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு டியான்டாங்-1 என்ற செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டது.

இந்தநிலையில், இந்த முதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் கைபேசிகளில் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில் சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்மூலம் ஆசியா – பசுபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட் கைபேசிகளில் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இதனால் நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட தொலைத் தொடர்பு இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version