26 15
உலகம்செய்திகள்

சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்

Share

சுற்றுபாதையில் வெடித்து சிதறிய செயற்கைக்கோள்

ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கினால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் உடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

iS-33e என்னும் செயற்கைக்கோளே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.

குறித்த செயற்கைக்கோளை இயக்குபவர், iS-33e ஆனது மொத்தமாக வெடித்து சிதறியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

போயிங், அதன் வணிக விமான வணிகத்தில் வேலைநிறுத்தம் மற்றும் அதன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சிக்கல்கள் போன்ற பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், செயற்கைக்கோள் உற்பத்தியாளரான போயிங், பிற அரசு நிறுவனங்களுடன் தரவு மற்றும் அவதானிப்புகளை பகுப்பாய்வு செய்ய ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக்...

world 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குழந்தைகளின் பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்: அம்பாறையில் ஒருவர் கைது!

கூரியர் சேவைகள் ஊடாகப் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தப்படும் புதிய தந்திரம் குறித்து இலங்கை காவல்துறை...

world 66
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு: 10 வருடங்களின் பின் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள், செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்களை...

world 65
செய்திகள்உலகம்

பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் II: விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த நாசா!

நிலவை நோக்கிய மனிதனின் வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, நாசாவின் ஆர்ட்டெமிஸ் II (Artemis II)...