உலகம்செய்திகள்

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

sudeepandsalman21556188862
Share

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

நடிப்பு, சினிமா தயாரிப்பு தவிர நடிகர் சல்மான் கான் வாடகை மூலமாக மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்து வருகிறார்.

நடிகர் சல்மான் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். அதில் ரியல் எஸ்டேட் ஒன்றாகும். இவருக்கு, மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மென்ட் தவிர பன்வெலில் ஒரு பண்ணை வீடு, கோராய் பீச்சில் ஒரு ஹாலிடே ஹோம், பாந்த்ரா கார்ட்டர் ரோடு என ஏகப்பட்ட அபார்ட்மென்ட்கள் சொந்தமாக உள்ளன.

மேலும், துபாயில் உள்ள புர்ஜ் பசிபிக் கட்டடத்தில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். இதனிடையே, பாந்த்ராவின் கார்ட்டர் ரோடில் உள்ள அவரது தாய்க்கு சொந்தமான பிளாட்டில் 19 அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.

சல்மான் கானுக்கு சான்டாகுரூஸ் லிங்க்கிங் ரோடில் உள்ள 4 மாடி கமர்ஷியல் பிளேஸ் தான் அதிக வருமானத்தை தருகிறது. 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடத்தை 2012 -ம் ஆண்டு ரூ.120 கோடிக்கு வாங்கினார்.

தற்போது, இந்த இடத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் மூலம் சல்மான் கானுக்கு மாதம் ரூ.90 லட்சம் வாடகை பணம் கிடைக்கிறது. முன்பு, பியூச்சர் குரூப் வசம் இருந்த இந்த இடத்தின் வாடகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வெர்சேஸ், என்டிசி சாக்லெட், ஒலிவியாலஜி போன்ற உணவு நிறுவனங்கள் உள்ளன. அதோடு, இந்த நிறுவனங்களில் மசாபா குப்தா, முகுல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் கோடிகளில் முதலீடு செய்துள்ளனர்.

சல்மான் கானுக்கு 9 வருவாய் ஆதாரங்களில் இருந்து வந்த வருமானம் மூலம் ரூ.2,907 கோடி நிகர சொத்து சேர்ந்துள்ளது.

 

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...