24 661e9eb71c6f5
இந்தியாசெய்திகள்

நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: நீதிமன்றம் உத்தரவு

Share

நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: நீதிமன்றம் உத்தரவு

இந்திய – பொலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இருவரை, ஏப்ரல் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.04.2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நேற்று (15.04.2024) 24 வயதான விக்கி குப்தா மற்றும் 21 வயதான சாகர் பால் என்பவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேகநபர்களை ஒன்பது நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் “குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...