உக்ரைனின் தாக்குதலால் கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல்
உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலால் ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் இவானோவெட்ஸ்(Ivanovets) என்ற ஏவுகணை கப்பலை உக்ரைனின் முக்கிய புலனாய்வு துறை திடீர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் நேற்று நள்ளிரவு கிரிமியாவின் கடல் பகுதியில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவிற்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முதல்நிலை தகவலின் படி, இவானோவெட்ஸ்(Ivanovets) கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அது வெற்றிகரமாக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.