அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் புடினுக்கே ஒரு மிரட்டல்
நேட்டோ நாடுகள் எதன் மீதாவது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு ரஷ்யா என்ன ஆகும் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் முன்னாள் அமெரிக்க விமானப்படை அலுவலர் ஒருவர்.
அமெரிக்க முன்னாள் விமானப்படை அலுவலரான ஜேக் (Jake Broe), என்பவர், அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஆபரேஷன்கள் தொடர்பில் பணியாற்றியவராவார்.
நேட்டோ அமைப்பு எப்படி ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்த முடியும் என்பது தொடர்பில் சமூக ஊடகமான எக்ஸில் சில்லிடவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜேக், நேட்டோ நாடுகள் எதன் மீதாவது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில், ரஷ்யாவில் வாழும் சுமார் 45 மில்லியன் ரஷ்யர்களும் ஆவியாகிவிடுவார்கள். மீதமிருக்கும் 100 மில்லியன் மக்களுக்கு,வாழ மிச்சம் மீதி வாழ்க்கை இருக்காது என்று கூறியுள்ளார் ஜேக்.
ஆகவே, ரஷ்ய மக்கள், உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்தும் வகையில் புடினுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
ஜேக் வெளியிட்டுள்ள சில்லிடவைக்கும் வீடியோவில், ரஷ்யா மீது நேட்டோ அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தினால் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன நடக்கும் என விவரமாக விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.