24 660e4aac1ca02
உலகம்செய்திகள்

உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்… பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா

Share

உக்ரைன் விடயத்தில் உதவ வேண்டாம்… பிரான்ஸை எச்சரிக்கும் ரஷ்யா

பிரான்ஸ் உக்ரைனுக்கு இராணுவ வீரர்களை அனுப்பினால், பிரான்ஸ் தனக்குத் தானே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டதை போன்ற விளைவுகளை சந்திக்க நேரும்” என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், பிரான்ஸ் இந்த பாதுகாப்பு அமைச்சரை தோலைபேசி அழைப்பில் எச்சரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இந்தப் போரில் அமெரிக்கா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி வருகின்றன, உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து பக்கபலமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கத்தய நாடுகளின் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதை புறந்தள்ளி விட முடியாது என தெரிவித்திருந்தார், இதன் வாயிலாக தேவைப்பட்டால் பிரான்ஸ், உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் என்பதை சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சோய்கு, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னு உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அப்போது செர்கெய் “பிரான்ஸ் அதிபர் மக்ரான் ஏற்கனவே அறிவித்ததன்படி, அதனை பின்பற்றினால், அது பிரான்ஸ் தனக்குத்தானே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வதாக அமையும்” என செபஸ்டியன் லெகோர்னுவிடம் எச்சரித்துள்ளார்.

மேலும், “உக்ரைன் மேற்கத்தய நாடுகளின் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை, பிரான்ஸ் உக்ரைனுக்கு உதவுவதாக சிறப்பு வேலைகளில் ஈடுபடாது என நம்புகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான போருக்குப் பின்னர் மேற்கத்தய நாடுகள் ரஷ்யாவுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துள்ள நிலையில் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் நீண்ட கால இடைவெளிக்குப்பின் அரிதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் மீண்டும் பேசியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்களும் முதன்முறையாக தற்போது பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...