download 9 1 15
உலகம்செய்திகள்

ஜேர்மனியை பழிவாங்கியது ரஷ்யா!

Share

உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து கொண்டது.

ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது என சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இது ரஷ்யாவின் கவனத்திற்கும் சென்றது.

இதற்கிடையே, ஜெர்மனியில் இருந்து ரஷிய தூதர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக, அதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், ரஷியாவும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 5-ம் திகதி ரஷியாவில் உள்ள ஜெர்மனி தூதர் கிசா ஆண்ட்ரியாஸ் வான் கெய்ரிடம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்தது.

இதன்படி, ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது.

ஒட்டுமொத்த ரஷ்ய-ஜெர்மனி உறவுகளை தொடர்ந்து, பெரிய அளவில் அழிக்கும் வகையில் பெர்லின் ஈடுபடுகிறது என மாஸ்கோ குற்றச்சாட்டு தெரிவித்தது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா அரசின் வெஜ்டா என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்கள் வெளியேற உள்ளனர் என தெரிவித்தார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...