hh
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு!

Share

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு!

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்கள் கிடைப்பதற்கான ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை உறுதிப்படுத்தும் வகையிலும் யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்களை வழங்கும் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றதோடு இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எச்.இ. லெவன் டழகராயன் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் முன்னர் இப்பணிகளை நிறைவு செய்து அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி(MOP) உரங்களை வழங்கும் பணி ஒழுங்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...