உக்ரைன் மீது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என AFP பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உடனான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியதுடன் தாக்குதலைத் தொடரவும் ரஷ்யா சபதம் செய்தது.
இந்த நிலையில்தான் ஆகத்து மாதத்துடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிக தாக்குதலை செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா நடத்தியது தெரிய வந்துள்ளது.
ஒரே மாதத்தில் சுமார் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. அதேபோல் நேட்டோ நாடுகளின் வான்வெளியில் அத்துமீறியது.
அதனைத் தொடர்ந்து நேட்டோ மாதம் முழுவதும் அதன் கிழக்கு எல்லைகளில் அதன் பாதுகாப்பை அதிகரித்தது.