கடந்த ஓராண்டில் மட்டும் 86 பில்லியன் ரூபிள் பட்ஜெட்டில் இருந்து வாக்னர் படைகளுக்காக செலவளிக்கபட்டு இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரிட்டு வரும் வாக்னர் கூலிப்படை வீரர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படையினர் அணிவகுத்தனர்.
ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்த வாக்னர் கூலிப்படையின் முயற்சி தோல்வியில் முடிந்தது, அத்துடன் இருதரப்புகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வாக்னர் கூலிப்படையை கலைத்து விடவும், அதன் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜினை பெலாரஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் ரஷ்யாவிற்கு எதிராக வாக்னர் கூலிப்படை மேற்கொண்ட இந்த ஆயுதப் புரட்சி, உலக அரங்கில் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வாக்னர் கூலிப்படை ரஷ்ய அரசால் உருவாக்கப்பட்டது, கடந்த மே 2022 முதல் மே 2023 வரை சுமார் 86 பில்லியன் ரூபிள் பட்ஜெட்டில் இருந்து வாக்னர் படையை பராமரிக்க செலவிடப்பட்டு இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை யாரும் திருடவில்லை அல்லது பெரிய அளவில் திருடவில்லை என நம்புவதாக ரஷ்யாவின் ஆயுத பதுங்கு குழி tsar தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்தையும் நாங்கள் சமாளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment