கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர்.
ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கத்தால் சாவடையும் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்டிருக்கிறார்.
இதன் பிரகாரம் ரஷ்யா முழுவதற்கும் ஊழியர்களுக்கு ஐப்பசி 30 ஆம் திகதியிலிருந்து கார்த்திகை 7 ஆம் திகதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் .” என்று புடின் அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவில் 81 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாக ரஷ்யாதான் தடுப்பூசியை அறிமுகம் செய்தது
இந் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
உலக நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
#world
Leave a comment