பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: வீதியோரம் பதுக்கி வைக்கப்பட்ட குண்டால் 3 பொலிஸார் பலி!

1500x900 44528372 phcoe

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே வீதியோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு (Tehrik-i-Taliban Pakistan – TTP) நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version