ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்து: இரணுவ வீரருக்கு நேர்ந்த துயரம்
ஜேர்மனியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
செவ்வாய்க்கிழமையன்று, தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் அந்த ராணுவ வீரர் கவச வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
செமி ட்ரக் ஒன்று கவச வாகனத்தில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடன் பயணித்த மற்ற ராணுவ வீரர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment