24 6642fb33393b2
உலகம்செய்திகள்

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்

Share

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்

ஈரானின் மூலோபாய துறைமுகமான சபாஹரை இயக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனங்கள் பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நீண்ட கால ஒப்பந்தத்தில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (Indian Ports Global Limited (IPGL) மற்றும் ஈரானின் போர்ட் அன்ட் கடல்சார் அமைப்பு (the Port & Maritime Organisation of Iran.) என்பன நேற்று கையெழுத்திட்டன.

10 ஆண்டு ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், தெஹ்ரானில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்கள் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஓமன் வளைகுடாவில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஈரானியத் துறைமுகம், பாகிஸ்தானைக் கடந்து, நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை அடைய இந்தியப் பொருட்களுக்கு நுழைவாயிலை வழங்கும்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த துறைமுகத்தின் வளர்ச்சியைக் குறைத்தன

இந்த துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் ஐபிஜிஎல் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும், மேலும் 250 மில்லியன் டொலர் கடனாக திரட்டப்படும்.

இந்நிலையில், எந்த ஒரு நிறுவனமும் – எவரும் – ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களில் அக்கறை கொண்டால், பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...