24 667a913159c40
உலகம்செய்திகள்

பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன், குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...