3 5 scaled
உலகம்செய்திகள்

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

Share

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது.

ஆனால், இருநாடுகளும் சமரசத்திற்கு வந்து தங்கள் தூதரக உறவை மீண்டும் தொடங்குவதாக கூட்டாக அறிவித்தன.

இந்த நிலையில், ஈரானின் சிஸ்டான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சரவான் நகரில் 9 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என பாகிஸ்தான் தூதர் முகமது முடாஸிர் திப்பி அடையாளம் காட்டியதன் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர், ”சரவனில் 9 பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த குடும்பங்களுக்கு தூதரகம் முழு ஆதரவை வழங்கும். இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம்’ என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...