24 662646f5901b7
உலகம்செய்திகள்

இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேல் தளங்கள்: பதவி விலகிய அதிகாரி

Share

இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேல் தளங்கள்: பதவி விலகிய அதிகாரி

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதான இராணுவ அதிகாரி தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதை கண்டுபிடிக்க தவறியமை உட்பட தவறுகளிற்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் அகாரொன் ஹலிவா தெரிவித்துள்ளார்.

இதன்படி தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும் வகையில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு செயற்படவில்லை என்பதை தனது கடிதத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், ஒக்டோபர் ஏழாம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய இஸ்ரேலின் முதலாவது உயர் அதிகாரி இவர் ஆவார். அத்துடன் இஸ்ரேலிய இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பல முன்னெச்சரிக்கைகளை தவறவிட்டனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 29
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கனடா உறவில் புதிய மைல்கல்: மாகாண சபைத் தேர்தல் மற்றும் இந்து-பசிபிக் மூலோபாயம் குறித்து விசேட சந்திப்பு!

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இசபெல் மார்ட்டின் (H.E. Isabelle Martin) மற்றும் பொதுநிர்வாக, மாகாண...

image 1200x800 21
செய்திகள்இந்தியா

கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? – தமிழக முதல்வர் மீது விஜய் அதிரடி விமர்சனம்; மீனவர் பிரச்சினையில் தவெக ஆவேசம்!

இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின்...

image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...