download 24 1 1
இலங்கைஉலகம்செய்திகள்

ஊழல் மோசடி ஒழிப்புக்கு மறுசீரமைப்பு அவசியம்-ஜுலி சங் வலியுறுத்து!

Share

ஊழல் மோசடி ஒழிப்புக்கு மறுசீரமைப்பு அவசியம்-ஜுலி சங் வலியுறுத்து!

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.
குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.
இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது. ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#srilankaNews

Share
தொடர்புடையது
images 2 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: பிராந்திய நிறுவனங்களுடன் நாளை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் நாளை (30)...

images 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேயாங்கொடையில் பயங்கரம்: வீட்டின் மீது பரவிய தீயில் சிக்குண்டு முதியவர் பரிதாப மரணம்!

வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 73...

Negombo silence protest iii
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அருட் தந்தை மிலன் பிரியதர்ஷன மீதான தாக்குதல்: 3 காவல்துறை அதிகாரிகள் அடையாள அணிவகுப்பில் சிக்கினர்!

அருட் தந்தை மிலன் பிரியதர்ஷன (Rev. Fr. Milan Priyadarshana) அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில்,...

DV636XCGKP642TWFS7MMEAA6K4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்: 16 மில்லியன் ரூபா நிதி முறைகேடு வழக்கு மார்ச் மாதம் முதல் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, வரும் மார்ச்...