காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்

rtjy 214

காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையின்படி தற்போது காசாவில் போர் நிறுத்தப்பட்டுள்ளமையால் அத்தியாவசிய நிவாரண உதவிகள் காசாவுக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து காசாவுக்குள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் நிரம்பிய லொரிகள் சென்ற வண்ணம் இருப்பதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி எகிப்து மற்றும் ஐ.நா. அனுப்பிய 4 எரிபொருள் லொரிகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்துகள் என அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சுமார் 200 லொரிகள் காசாவுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடந்துவரும் போரினால் காசா மக்கள் அத்தியாவசியமான உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிப்பதோடு மின்சாரம், இணைய சேவையும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version