பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர்.
இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
போலந்து எல்லையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகலிடம் கோர எத்தணிக்கும் அகதிகள் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.
குறிப்பாக போலந்தின் Kuznica கிராமம் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையவே அவர்கள் முயன்று வருகின்றனர்.
மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் போடப்பட்ட முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படை வீரர்கள் மோதலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment