கீவ் நகரில் மக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்பு!

கீவ் நகரில் 900 பேரின் உடல்கள்

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 900 இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கீவ் பிராந்திய பொலிஸ் படைத் தலைவர் ஆன்ட்ரிய் நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

வீதிகளிலும், தற்காலிக புதைகுழிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த உடல்களில், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மக்களை வீதிகளில் நிற்க வைத்து ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புச்சா நகரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கீவிலும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews

Exit mobile version