சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

Share

திருமண புகைப்படம் வெளியிட தயாரா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், திருமண புகைப்படம் வெளியிட தயாரா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும், “சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனவும் கூறினார்.

இந்த புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

திருமண புகைப்படம் வெளியிடுங்கள்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால், வீர லட்சுமிக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது.

நான் காதலித்தேன் என்றும், அவரை திருமணம் செய்தேன் என்றும் நடிகை விஜயலட்சுமி சொல்கிறார். அதற்கு, அவர் திருமண புகைப்படங்களை வெளியிட தயாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “இந்த விவகாரத்தில் உண்மை இல்லை. இதை போல விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...