துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 300 இராணுவ வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அழைப்பு கிடைத்ததும் அவர்களை அனுப்பவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொண்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்ததின் போது, துருக்கி உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகவும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
#world #SriLanka