tamilni 114 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராக இருக்கின்றோம்: போலந்து அறிவிப்பு

Share

போருக்கு தயாராக இருக்கின்றோம்: போலந்து அறிவிப்பு

போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போர் சூழலில் போலந்து மீதான போர் அச்சுறுத்தல் தொடர்பில் போலந்து பாதுகாப்பு மந்திரி விளாடிசா கோனேக் காமிஸ் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிலளிக்கையில்,

போர் அச்சுறுத்தலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை போலந்து இராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அனைத்து வகையான சூழ்நிலைகளையும் நான் எதிர்பார்க்கிறேன். அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு மந்திரியின் பணி அதுதான். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றோம். இதனை வெறும் பேச்சுக்காக நான் சொல்லவில்லை.

போலந்து இராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

பெரியளவிலான ஆயுதக்கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட உபகரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...