நடக்கும் அரியவகை மீன் கண்டறிவு!

அவுஸ்திரேலியாவில் நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, pink hand fish எனப்படும் துடுப்புகளைப் பயன்படுத்தி இந்த அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட இந்த அரிய வகை மீன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் தென்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

pink hand fish

ஒரு காலத்தில் அதிகளவில் இருந்த இந்த மீன்கள் தற்பொது பெருமளவு குறைந்துவிட்டதாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு அழிந்து வரும் உயிரினங்களில் பட்டியலில் இணைக்கப்பட்டதாகவும் கொமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் துடுப்புகள் போன்ற சிறிய கைகள் இருக்கும். அந்த துடுப்புகளை மீன்கள் நடக்க பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews

Exit mobile version