2 16 scaled
உலகம்செய்திகள்

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: வீடியோ

Share

ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: வீடியோ

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானத்தில் மழைத் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஏர் இந்தியா போயிங் பி787 ட்ரீம்லைனர் விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து கேபினுள் இந்த மழைத்தண்ணீர் கசிந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வீடியோவில் விமான பணிப்பெண்கள் மழைத் தண்ணீர் கசியும் பகுதிகளை துணியைக் கொண்டு அடைக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

ஏற்கனவே பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் உள்ள நம்பகத்தன்மை மற்றும் திகதி ஆகியவை தனிப்பட்ட முறையில் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...