25 6848de340b997
உலகம்செய்திகள்

கரி ஆனந்தசங்கரிக்கு எதிராக இனவெறி கருத்துக்கள்: கண்டிக்கும் தமிழ் அமைப்புக்கள்

Share

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.

அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த தமிழ் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கனேடிய தமிழ் கூட்டு, கனடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் ஆனந்தசங்கரி மீதான மீதான விமர்சனங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.

கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஆனந்தசங்கரி, கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே, அவர் மீது இனவெறித் தன்மைக்கொண்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அறிவிப்பு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என கனேடிய அமைச்சர் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....