200 ஆண்டுகளுக்கு பின்னர் புடின் படைத்த சாதனை
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதன்படி ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலினுக்கு பின்னர் 200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்று ரஷ்யாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
1999 இல் முதன்முதலில் பதவிக்கு வந்த முன்னாள் புலனாய்வுத்துறை தலைவரான லெப்டினன்ட் கேணல் புடின் இன்றுவரை ஆட்சியில் தொடர்ந்த வண்ணம் உள்ளார்.
இதனிடையே ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள புடின் மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம் என்றும், இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது என்றும் புடின் கூறியுள்ளார்.