தேர்தலில் புடின் வெற்றி பெறுவாரா? பிரபல ஜோதிடரின் கணிப்பு
ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவைப் பொருத்தவரை புடின் வெற்றி பெறுவது நிச்சயம் என பலரும் கூறிக்கொண்டிருக்க, புடினுடைய எதிர்காலம் குறித்து சில தகவல்களைக் கூறியுள்ளார், எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபலம் ஒருவர்.
தனது ஜோதிட முறைப்படி பார்த்தால், புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார் எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல பிரித்தானியப் பெண்ணான இன்பால் (Inbaal Honigman).
ஆனால்…
புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறும் இன்பால், அதேநேரத்தில், அடுத்து வரும் சில ஆண்டுகள் புடினுக்கு சவால் நிறைந்தவையாக இருக்கும் என்கிறார். மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கடினமான சூழலை அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
கடினமான சுழல்களை எதிர்கொண்டு மீண்டு வரும் அவரது திறன் சோதிக்கப்படும் என்று கூறும் இன்பால், ஒரு மனிதராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் புடினுடைய ஐந்தாவது ஆட்சிக்காலம் சவாலானதாக இருக்கும் என்கிறார்.
அதே நேரத்தில், ரஷ்யாவின் எதிர்காலம் சற்றே பிரகாசமானதாக தெரிவதாகக் கூறும் இன்பால், என்றாலும், நாடு முதலில் கடினமான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லவேண்டியிருக்கும் என்கிறார்.
அதாவது, ரஷ்யா மீண்டும் உலக அரங்கில் மரியாதைக்குரிய ஒரு நாடாக முடியும் என்றும், சொல்லப்போனால், சமாதான முயற்சிகளையும் ரஷ்யா துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார் இன்பால்.